எவனும் பிறக்கும் போது வீரனாக பிறப்பதில்லை... நாளாந்தம் அடி
பட்டு வீரனாக ஆக்கப்படுகிறான்...

வியாழன், 5 பிப்ரவரி, 2009

வெண்ணிலா கபடிக்குழு விமர்சனம்


நடிப்பு: விஷ்ணு, சரண்யா மேனன், கிஷோர் மற்றும் பலர்
இசை: செல்வகணேஷ்

இயக்குனர்: சுசீந்திரன்


கதை ஏதோ ஆரம்பதில கபடி விளையட்டாம் என்றவுடன் எல்லாரும் அட நம்ம கில்லின்ர கொப்பி போல எண்டு நினைப்பியள். ஆனா கதையிலும் திரைக்கதையிலும் இருக்கும் சுவாரஸ்யத்தால் எங்களுக்கு நல்ல படம் பார்த்த திருப்தியை கொடுக்கிறது. இதற்கு இயக்குனர் சுசீந்திரனிற்கு நாம் ஒரு ‘ஓ’ போட்டால் கூட தப்பில்லை. ஒரே மூச்சில் கதையை எந்த இழுத்தடிப்பும் இல்லாமல் சொல்லியிருக்கிறார் சுசீந்திரன்। அவரது இயக்குனர் வாழ்க்கையில் இது ஒரு மைல் கல்லாக அமையும் என்றால் கூட தப்பில்லை.

அப்புறம் புது முகம் விஷ்ணு சொல்லி வேலையில்லை. நம்ம விஜய், அஜித் எல்லாரும் ரியூஷன் எடுக்கலாம் போல.அப்படி ஒரு இளமை துடிப்புடன் வெளுத்து கட்டுகிறார். கபடி விளையாட்டிலும் சரி காதல் காட்சிகளிலும் சரி புது முகம் போலே தெரியவில்லை. அப்படி ஒரு நடிப்பு. சரண்யா மேனனை பற்றி சொல்ல தேவையில்லை. யாரடி நீ மோஹினி படத்திற்கு பிறகு யாரடி நீ மோஹினி என்று எல்லாரையும் கேட்கும் படி வைத்தவர். பஞ்சாமிர்தம் மற்றும் அஆஇஈ என்பன அவரை ஒரு தனி கதாநாயகியாக எமக்கு காட்டியது.

ஏதோ ஒரு பட்டியில் பிறந்து வழமை போல் கபடியே தொழில் என்று திரியும் கதாநாயகன். ஆனால் எல்லா போட்டிகளிலும் தோல்வி தான் முடிவு.இது இப்படி இருக்க ஒரு போட்டிக்காக மதுரைக்கு போகிறார் விஷ்ணு. அங்கே ஒரு திருவிழாவில் சரண்யாவை கண்டு காதலில் விழுகிறார். சிறிது நேரம் இந்த காதல் கதை. ஆனாலும் அந்த சிறிது நேரத்திலும் ஒரு துளி அமுதம் ஒரு துளி விஷம் என சுவாரஷ்யத்திற்கு குறைவில்லை. காதல் காட்சிகள் ஒவ்வொன்றையும் தத்ரூபமாக தந்திருக்கிறார் இயக்குனர்.

பின்புதான் கதையில் சுவாரஸ்யம்। வழமையான வில்லன் வந்தாலும் கதையில் ஏற்படும் திருப்பங்கள் தான் படத்தின் பிளஸ் பாயிண்ட். வழமையான வில்லன் கிஷோர் இதில் சாதாரண பயிற்சியாளர்.
அவரும் தன்னால் எல்லா பாத்திரங்களும் நடிக்க முடியும் என்று உணர்த்தியிருக்கிறார்। செல்வகணேஷின் இசையில் ‘லேசா பறக்குது’ பாடல் மனதுக்கு இதமாய் இருக்கிறது.

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

பட விமர்சனமும் செய்றிங்கள் போல.. நல்லா இருக்கு...

//**அந்த சிறிது நேரத்திலும் ஒரு துளி அமுதம் ஒரு துளி விஷம் என சுவாரஷ்யத்திற்கு குறைவில்லை**//

இந்த வரி ரொம்ப பிடித்து இருக்கு. நீர் சாமான் உள்ள ஆள் என்று சொல்லுது இந்த வரி

வாழ்த்துகள்

Nikkey சொன்னது…

மிக நன்று நிராதன்..... உங்கள் வலைப்பதிவு மிகவும் சிறப்பு, அதிலும் "என்னை பற்றி சில வரிகள்" என்பதற்கு நீங்க ஒரு வரியில் பதில் அளித்தது ஒரு kic.
மற்றும் "எனது முழு சுயவிவரத்தைக் காண்க" என்று போட்டு ஒரு சில விஷயம் போட்டது மேலும் ஒரு kic.

நிராதன் சொன்னது…

//"என்னை பற்றி சில வரிகள்" என்பதற்கு நீங்க ஒரு வரியில் பதில் அளித்தது ஒரு kic. //

நிக்கி அண்ணே அது ஒரு வரி இல்லை.
வடிவா பாருங்கோ அதில என்ன பற்றி 3 வரி இருக்கு.
மற்றது அந்த தளம் தானாகவே தான் சில விபரங்களை தெரிவு செய்து போடும். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.....

sugesan சொன்னது…

superb. director SUSEETHIRAN matum itha partha unakku kiss tharuvar. unda vimarsanathaleye intha padam parkkalam pola irrukku.