எவனும் பிறக்கும் போது வீரனாக பிறப்பதில்லை... நாளாந்தம் அடி
பட்டு வீரனாக ஆக்கப்படுகிறான்...

புதன், 11 மார்ச், 2009

பாடசாலை அனுபவங்கள்


எனது வாழ்க்கையில் மறக்க முடியாத பல சம்பவங்கள் எனது பள்ளிக்கூட நாட்களில் தான் நடந்தது. அவற்றில் சிலவற்றை இதில் குறிப்பிடுவதன் மூலம் அவற்றை மீட்டு பார்க்கிறேன்.

நான் அந்த பாடசாலைக்கு பத்தாம் தரத்திலேயே சேர்ந்தேன். ஆரம்பதில் நான் யாழ்ப்பாணம் புனித பரி।யோவான் கல்லூரியிலே(St.John's College) படித்தேன். ஆரம்ப வகுப்பு முதல் அங்க படிச்சதால எனக்கு இரண்டு தரம் prefect batch கிடைச்சது. ஆனா அதிலயும் நான் ஒழுங்கா இருக்கேல. ஒரு முறை இப்படி தான் sweeping turn இல வகுப்பு புதிய மாணவன் ஒருவனுக்கு ragging செய்தனாங்கள் அதுக்கு பிறகு தான் தெரியும் அவன் எங்கட schoolteacher(பெண்) இண்ட தம்பி எண்டு கிழிஞ்சு போச்சு அவா போய் sectional head இட்ட வத்தி வச்சிட்டா அவர் bagஐயும் தூக்கி கொண்டு போய் அப்பாவை கூட்டிக்கொண்டு வரச் சொல்லிட்டார்.



எங்கட அப்பாவோ சொல்லி வேலையில்லை அவர் ஒரு ஹிட்லர் ஒரு மாதிரி அவரிட்ட விசயத்தைசொன்னன் சரி தொடங்கியது முழக்கம் ஒரு மாதிரி அடுத்த நாள் அவரையும் கூட்டிக் கொண்டு பள்ளிக்கூடத்துக்கு போனன் அங்க போன அங்க அடுத்த இடி காத்துக் கொண்டிருந்திச்சு. எங்கட அப்பாவைக் கண்டோன head ”உங்கட மகனே இவர்? இனி நான் பார்த்துக் கொள்ளுறன்”. அதுக்கு பிறகு தான் தெரியும் அவரும் அப்பாவும் ஒண்டா படிச்சவையளாம். யார் கவலைப்
பட்டா இவை படிக்கேல எண்டு அதுக்கு பிறகு என்ன சனியனை தூக்கி பனியனுக்குள்ள விட்ட கதை தான்

இது இப்படி போக வந்தது 2000 April। இயக்கம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நோக்கோட முன்னேறத் தொடங்கினாங்கள் . கவிண்டுது கப்பல். பாடசாலை மூடப்பட்டது. அப்புறம் என்ன ஜாலி தான். வெட்டியாக பொழுதை போக்கி கொண்டிருந்தம். பிறகு ஒரு மாதிரி school தொடங்கிச்சு. அப்புறம் 2ம் தவணை பரீட்சை வந்தது. 2 பரீட்சைகள் முடிந்து விட்டிருந்தது. மூன்றாவது பரீட்சை போய்க்கொண்டிருக்கிறம். அடே St.John's இல ஷெல் விழுந்துட்டுதாம். பிறகு என்ன ஒரே ஒட்டம் எப்படி வீட்டை வந்து சேர்ந்தன் எண்டு இண்டு வரை எனக்கு தெரியாது.

அப்புறம் இடம் பெயர்வு அது இது எண்டு கொஞ்ச காலம் போச்சு। .பிறகு இது சரி வராது எண்டிட்டு மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு வந்து திருகோணமலைக்கு வந்தனாங்கள் இப்ப அது எனக்கு ஒரு சொர்க்கபுரி மாதிரி(school தவிந்த மற்ற இடங்கள் ஏனெண்டா schoolஇல பல கசப்பான அனுபவங்கள்). சரி இனி திருகோணமலை school வாழ்க்கையை அடுத்த பதிவில எதிர்பாருங்கோ.....

வியாழன், 5 மார்ச், 2009

வாசித்தவற்றில் பிடித்தவை

நான் பாரத ரத்னா விருதை எதிர்ப்பார்க்கவில்லை. கலைஞர் பட்டமே எனக்குப் போதும்.
- கருணாநிதி
அப்ப, எதிர்பார்க்கறதுக்கு முன்னாடியே கொடுத்துடனும்னு சொல்ல வர்றீங்களா?

நிஜம் சொன்னால் ரஜினியைவிட நீயொரு வசீகரமான ஃபிகர். நாவினிக்க உன்னைப் பாடியே என் உடம்பில் ஏறிப்போனது ஷுகர்
-கருணாநிதியைப்பாராட்டி கவிஞர் வாலி
வாலி… நீயொரு ஜாலி
சினிமாவில் நீ எழுதுவது லாலி
கலைஞரை புகழ்வதே உன் ஜோலி
உன் வர்ணிப்புக்கு இல்லை ஒரு வேலி
எத்தனை வேண்டுமானாலும் உனக்குத் தரலாம் கூலி
எப்படி இருக்கு இந்த கேலி?

ஆபாச வாழ்த்து அட்டை, பொதுமக்கள் கூடும் இடங்களில் அருவருக்கத்தக்க அத்துமீறல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்காமல், காதலர் தினத்துக்கே தடைவிதிக்கவேண்டும்.
- இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலர் செந்தில்குமார்
பேசாம யாருமே காதலிக்கக் கூடாதுன்னு தடைச் சட்டம் போட்டுருலாமே. அப்புறம் காதலர் தினமாவது காதலிக்காத தினமாவது. காதலர்களும், அவர்தம் பெற்றோர்களும் கவலைப்பட விஷயத்தில் எல்லாம் மூக்கை நுழைத்தால் வேற என்னதான் பஞ்ச் அடிக்கறதான்.

ஒட்டுமொத்த ஈழ இயக்கத்தையே நையாண்டி செய்யும் அம்மாவிற்கு இன்று வரை ராமதாஸ் பதில் சொல்லியிருக்கிறாரா? அடுத்த கூட்டணி அம்மாவோடு என்பதால் அவர், எவ்வளவு சர்வ ஜாக்கிரதையாக இருக்கிறார்.
- பத்திரிகையாளர் சோலை கட்டுரை
நடுநிலையாக இருக்கவேண்டிய பத்திரிகையாளர்களில் சிலரே பாதைகள் மாறி மாறி பயணிக்கும்போது அரசியல்வாதிகளைப் பற்றி கேட்கவேண்டுமா என்ன?

அதிலும் ஐயா, மதிப்பவர்களை மிதிப்பதிலும் மிதிப்பவர்களை மதிப்பதிலும் வல்லவர் ஆயிற்றே. அவருக்குத் தேவை ஜெயிக்கும் கூட்டணியில் இடம். சென்ற முறையைவிட கூடுதல் எம்.பி., எம்.எல்.ஏ., சீட்டுகள் அவ்வளவுதான். அதற்காக அவர் எத்தனை நாடகம் வேண்டுமானாலும் போடுவார். அவர் மட்டுமா அப்படி, அரசியல் கட்சிகள் எல்லாம அப்படித்தானே உள்ளன.

2008 Oscar - Slumdog Millionaire




CASTING: Dev Patel – Jamal Malik

Frideo Pinto – Latika

Irfan Khan – Policeman

Anil Kapoor – Prem Kumar

Azharuddin Mohammed Ismail - Youngest Ismail

Ayush Mahesh Khedekar - Youngest Jamal

MUSIC: A.R.Rahman

SOUND MIXER: Rasul Pookutty

SCREEN PLAY WRITER: Simon Beaufoy

DIRECTION: Danny Boyle

slumdog millionaire is one of the greatest film I watched in my life. I'm going to describe about that film in my blog. It'll be helpful for whoever hasn’t watched the film yet. This story is based on how a boy who is born and raised in a slum wins the the program "Who wants to be a Millionaire". There is a boy who won 20 million rupees in a program called “Who Wants To Be A Millionaire?”. It is like a game show. The boy who won the title even doesn’t know who Mahatma Gandhi is. So How does he know the answer for those questions.

The story of Jamal Malik, an 18 year-old orphan from the slums of Mumbai, who is about to experience the biggest day of his life. With the whole nation watching, he is just one question away from winning a staggering 20 million rupees on that game show. But when the show breaks for the night, police arrest him on suspicion of cheating; how could a street kid know so much? Desperate to prove his innocence, Jamal tells the story of his life in the slum where he and his brother grew up, of their adventures together on the road, of vicious encounters with local gangs, and of Latika, the girl he loved and lost. Each chapter of his story reveals the key to the answer to one of the game show's questions. Each chapter of Jamal's increasingly layered story reveals where he learned the answers to the show's seemingly impossible quizzes. But one question remains a mystery: what is this young man with no apparent desire for riches really doing on the game show? When the new day dawns and Jamal returns to answer the final question, the Inspector and sixty million viewers are about to find out. At the heart of its storytelling lies the question of how anyone comes to know the things they know about life and love.