
இன்று இலங்கை-இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது போட்டி........ஹிஹி
இந்த ஆட்டம் தேவையா?? ஏற்கனவே மூன்று போட்டிகளில் வாங்கியது காணாது போல!!!!!!
பேசாம பாகிஸ்தான் அணியோட விளையாடி இருக்கலாம் தானே. ஏன் இப்படி?? என்ன கொடுமை பாருங்கோ.
இப்படி வேண்டி கட்டோணும் எண்டு விதி இருந்தா யார் தான் காப்பாத்த முடியும்:(
இன்றும் வென்றால் தோனியின் தலமைத்துவம் சாதனை இந்தியாவில் சாதனை படைக்கும். இது வரை ஒரு தலமைத்துவத்தின் கீழ் தொடர்ந்து ஒன்பது போட்டிகளில் மட்டுமே இந்தியா வென்றுள்ளது.
தோனி தலமையில் இது வரை எட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. இது ஒன்பதாவது போட்டி. ஆனா தோனி இன்றைய வெற்றி தனக்கு முக்கியமல்ல. அணியின் சகல வீரர்களும்
போட்டிகளில் பங்கு பற்ற வாய்ப்பளிக்க பட வேண்டும் என்று கூறியுள்ளாராம். அப்ப பாருங்கோவன்......... தொடர்ந்து தான் ஒரு நல்ல மனிதர் என்பதை பறை சாற்றியுள்ளார்.
ஆனா சச்சின் தான் பாவம்... சனி பகவான் நடுவர் வடிவில் நின்று விளையாடுறார். இன்றாவது நல்ல தீர்ப்பு நடுவரால் வழங்கப்படுமா அல்லது இன்றும் அதே சனி பகவான் தான் நடுவரா???
இலங்கை அணி தான் பாவம். சமிந்த வாஸிக்கு பிறகு ஒரு நல்ல வேக பந்து வீச்சாளர் இல்லாம கஸ்டபடுகுது. பேசாம எல்லாத்தையும் இந்தியாட்ட வாங்கிற மாதிரி இதையும் கேட்டு(பந்து வீச்சாளர்).
இந்திய வேக பந்து வீச்சாளர்கள் நிறைய பேர் வாய்ப்பளிக்க படாமல் இருக்கினம். (R.P.சிங், பாலாஜி, இர்ஃபான் பதான்). இவயள் யாரிட்டயும் கேட்டு பார்க்கலாம். மெண்டிஸும் வாங்கி கட்ட தொடங்கிட்டார்.
இதுக்கிடையில பாருங்கோ 20-20 போட்டிக்கு இலங்கை வீரர்களுக்கு ஓய்வாம். என்ன கிளிச்சவயள் எண்டு ஓய்வு கேக்கினம்... இன்னும் இரண்டு போட்டி இருக்கு பார்ப்பம். 5-0ஓ தெரியேல்ல.
14 கருத்துகள்:
ச் சா... நிராதன், உங்கள பேசாம இலங்கை கிரிக்கட் நிர்வாக சபை தலைவரா போடலாம் போலிருக்கு... ;)
tony greig பார்த்தா பயந்திடுவார்... தனக்கு போட்டியா யாரோ வந்திட்டான் என்று.... :D
சற்றும் மனம் தளராம நான்காவது போட்டிக்கும் போவதாக கேள்விப்பட்டோம். மற்றும் 20-20 கும் போவதாக கேள்விப்பட்டோம். நன்று நன்று ..............உம் நண்பன் தமிழ் அடிக்க தெரியாம தடுமர்ருகிறார் போல.
nirathan we waiting for ur live score.
பின்னூட்டலுக்கு நன்றி.
///ச் சா... நிராதன், உங்கள பேசாம இலங்கை கிரிக்கட் நிர்வாக சபை தலைவரா போடலாம் போலிருக்கு... ;)///
எனக்கு அந்த ஆசை எல்லாம் இல்ல.
வந்தா வேண்டாம் எண்டு சொல்ல மாட்டன்.
நிக்கி இலங்கை அணி ஒரு போதும் சோர்ந்து விடாது.
நல்ல இருக்கு... ஆனால் இந்தியாவை இப்படி உயர்த்தியதில் எனக்கு சிறு மன கஷ்டம் ...நல்ல நடை.....நிக்கி இந்தா நான் தமிழில் டைப் பண்ணிவிட்டேன்....சந்தோசமா ......
இல்லங்கயில்லும் குத்துகல்லாட்டம் வீரர்கள் இருக்குறார்கள். அவர்களை குழந்தையாட்டம் பயன்படுத்தாமல் இருப்பதுதான் பிரச்சனை .......
///ஆனால் இந்தியாவை இப்படி உயர்த்தியதில் எனக்கு சிறு மன கஷ்டம் ///
நான் இந்தியாவை உயர்த்தி பேசவில்லை.
உண்மையை சொன்னன் அவ்வளவு தான்.
மற்றபடி ஒன்றுமில்லை.
தோல்வி ஒன்றும் இழிவில்லை.
இத்தொடரில் இலங்கை தடுமாறுகிறதுதான், ஆனால் எல்லோருக்கும் ஒரு காலம் உண்டு.
இன்னொரு விடயம், மூன்று முறையும் இம்மைதானத்தில் நாணயச்சுழற்சியை வென்ற அதிஷ்டம் டோனிக்குண்டு!
எல்லாம் சரி தான் தம்பி. இது முதல் முறை இல்லையே. பங்களாதேஸிடமும் முரளியால் தப்பினது மறந்து போச்சு போல.
"நல்லவர் யாவரும் ஒதுங்கி கொண்டால் நரிகளின் அட்டகாசம் தொடங்கிவிடும்".
அரசியல் கதைக்க பயப்படாதே போனால் இரண்டு பெரும் சேர்ந்து மேல போவம்!!!!
இலங்கை தோத்தது கவலை இல்ல ஆனால் இலாங்கையடம் பாகிஸ்தான் தோத்தது கவலை.....
என்ன சொல்றிங்க நிராதன்.
//இதுக்கிடையில பாருங்கோ 20-20 போட்டிக்கு இலங்கை வீரர்களுக்கு ஓய்வாம். என்ன கிளிச்சவயள் எண்டு ஓய்வு கேக்கினம்... //
ஓய்வு எடுக்க/கொடுக்க கிழிச்சுத் தான் ஆகவேண்டும் என்றில்லை.. ;) இலங்கை அணி வீரர்கள் ஓய்வில்லாமல் தொடர்ந்து விளையாடியவன்னம் இருக்கிறார்கள். அடுத்த டெஸ்ட் தொடருக்கும் பாகிஸ்தான் செல்ல இருக்கிறார்கள்.. எனவே ஒரு சின்ன ஓய்வும் தேவை..
அதே போல இலங்கையின் வீரர்களையும் பயன்படுத்திப் பார்க்கலாம் இல்லையா?
//இந்திய வேக பந்து வீச்சாளர்கள் நிறைய பேர் வாய்ப்பளிக்க படாமல் இருக்கினம். (R.P.சிங், பாலாஜி, இர்ஃபான் பதான்). //
இது தாம்ப்பா பெரிய நகைச்சுவை.. சிங்கும்,பதானும் நல்ல பந்து வீச்சாலர்களா? சராசரியைக் கொஞ்சம் பாருங்க.. ;)
பாலாஜி பாவம்.. காயம் இவ்வளவு காலம் படாத பாடு படுத்தியது.. ஆனால் இன்று இலங்கை வீரர்கள் அவரைப் பிய்த்துத் தள்ளி விட்டார்கள்.
//இலங்கை அணி வீரர்கள் ஓய்வில்லாமல் தொடர்ந்து விளையாடியவன்னம் இருக்கிறார்கள்.//
இலங்கை வீரர்கள் தொடர்ந்து மைதானத்தில் வெறுமனே நிற்கிறார்கள்.
விளையாடுகிறார்கள் என்பது சற்று ஏற்றுக்கொள்ள கொஞ்சம் கஷ்டமாக இருக்குது....
//சிங்கும்,பதானும் நல்ல பந்து வீச்சாலர்களா? சராசரியைக் கொஞ்சம் பாருங்க.. ;)//
இந்த தொடரில் சர்மாவின் economyஐ கொஞ்சம் பார்த்தால் அவரை சிறந்த பந்துவீச்சாளராக தெரியவில்லையே...
அத்துடன் இற்றைக்கு 3 வருடங்களின் முன் பதானின் reverse swing பந்தை கொஞ்சம் யோசியுங்கள் (பாகிஸ்தானிற்கு எதிராக பெற்ற டெஸ்ட் hattrick)
கருத்துரையிடுக