எவனும் பிறக்கும் போது வீரனாக பிறப்பதில்லை... நாளாந்தம் அடி
பட்டு வீரனாக ஆக்கப்படுகிறான்...

வியாழன், 5 மார்ச், 2009

வாசித்தவற்றில் பிடித்தவை

நான் பாரத ரத்னா விருதை எதிர்ப்பார்க்கவில்லை. கலைஞர் பட்டமே எனக்குப் போதும்.
- கருணாநிதி
அப்ப, எதிர்பார்க்கறதுக்கு முன்னாடியே கொடுத்துடனும்னு சொல்ல வர்றீங்களா?

நிஜம் சொன்னால் ரஜினியைவிட நீயொரு வசீகரமான ஃபிகர். நாவினிக்க உன்னைப் பாடியே என் உடம்பில் ஏறிப்போனது ஷுகர்
-கருணாநிதியைப்பாராட்டி கவிஞர் வாலி
வாலி… நீயொரு ஜாலி
சினிமாவில் நீ எழுதுவது லாலி
கலைஞரை புகழ்வதே உன் ஜோலி
உன் வர்ணிப்புக்கு இல்லை ஒரு வேலி
எத்தனை வேண்டுமானாலும் உனக்குத் தரலாம் கூலி
எப்படி இருக்கு இந்த கேலி?

ஆபாச வாழ்த்து அட்டை, பொதுமக்கள் கூடும் இடங்களில் அருவருக்கத்தக்க அத்துமீறல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்காமல், காதலர் தினத்துக்கே தடைவிதிக்கவேண்டும்.
- இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலர் செந்தில்குமார்
பேசாம யாருமே காதலிக்கக் கூடாதுன்னு தடைச் சட்டம் போட்டுருலாமே. அப்புறம் காதலர் தினமாவது காதலிக்காத தினமாவது. காதலர்களும், அவர்தம் பெற்றோர்களும் கவலைப்பட விஷயத்தில் எல்லாம் மூக்கை நுழைத்தால் வேற என்னதான் பஞ்ச் அடிக்கறதான்.

ஒட்டுமொத்த ஈழ இயக்கத்தையே நையாண்டி செய்யும் அம்மாவிற்கு இன்று வரை ராமதாஸ் பதில் சொல்லியிருக்கிறாரா? அடுத்த கூட்டணி அம்மாவோடு என்பதால் அவர், எவ்வளவு சர்வ ஜாக்கிரதையாக இருக்கிறார்.
- பத்திரிகையாளர் சோலை கட்டுரை
நடுநிலையாக இருக்கவேண்டிய பத்திரிகையாளர்களில் சிலரே பாதைகள் மாறி மாறி பயணிக்கும்போது அரசியல்வாதிகளைப் பற்றி கேட்கவேண்டுமா என்ன?

அதிலும் ஐயா, மதிப்பவர்களை மிதிப்பதிலும் மிதிப்பவர்களை மதிப்பதிலும் வல்லவர் ஆயிற்றே. அவருக்குத் தேவை ஜெயிக்கும் கூட்டணியில் இடம். சென்ற முறையைவிட கூடுதல் எம்.பி., எம்.எல்.ஏ., சீட்டுகள் அவ்வளவுதான். அதற்காக அவர் எத்தனை நாடகம் வேண்டுமானாலும் போடுவார். அவர் மட்டுமா அப்படி, அரசியல் கட்சிகள் எல்லாம அப்படித்தானே உள்ளன.

2 கருத்துகள்:

ilhamaran சொன்னது…

hi there is a new blog about our campass 2010 batch at www.moratamils.blogspot.com. hope you guys enjoy the blog. new updates to arrive. please spread the news

ilhamaran

ilhamaran சொன்னது…

hi there is a new blog about our campass 2010 batch at www.moratamils.blogspot.com. hope you guys enjoy the blog. new updates to arrive. please spread the news

ilhamaran