நான் அந்த பாடசாலைக்கு பத்தாம் தரத்திலேயே சேர்ந்தேன். ஆரம்பதில் நான் யாழ்ப்பாணம் புனித பரி।யோவான் கல்லூரியிலே(St.John's College) படித்தேன். ஆரம்ப வகுப்பு முதல் அங்க படிச்சதால எனக்கு இரண்டு தரம் prefect batch கிடைச்சது. ஆனா அதிலயும் நான் ஒழுங்கா இருக்கேல. ஒரு முறை இப்படி தான் sweeping turn இல வகுப்பு புதிய மாணவன் ஒருவனுக்கு rag

எங்கட அப்பாவோ சொல்லி வேலையில்லை அவர் ஒரு ஹிட்லர்। ஒரு மாதிரி அவரிட்ட விசயத்தைசொன்னன் சரி தொடங்கியது முழக்கம் ஒரு மாதிரி அடுத்த நாள் அவரையும் கூட்டிக் கொண்டு பள்ளிக்கூடத்துக்கு போனன் அங்க போன அங்க அடுத்த இடி காத்துக் கொண்டிருந்திச்சு. எங்கட அப்பாவைக் கண்டோன head ”உங்கட மகனே இவர்? இனி நான் பார்த்துக் கொள்ளுறன்”. அதுக்கு பிறகு தான் தெரியும் அவரும் அப்பாவும் ஒண்டா படிச்சவையளாம். யார் கவலைப்
பட்டா இவை படிக்கேல எண்டு அதுக்கு பிறகு என்ன சனியனை தூக்கி பனியனுக்குள்ள விட்ட கதை தான்।
இது இப்படி போக வந்தது 2000 April। இயக்கம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நோக்கோட முன்னேறத் தொடங்கினாங்கள் . கவிண்டுது கப்பல். பாடசாலை மூடப்பட்டது. அப்புறம் என்ன ஜாலி தான். வெட்டியாக பொழுதை போக்கி கொண்டிருந்தம். பிறகு ஒரு மாதிரி school தொடங்கிச்சு. அப்புறம் 2ம் தவணை பரீட்சை வந்தது. 2 பரீட்சைகள் முடிந்து விட்டிருந்தது. மூன்றாவது பரீட்சை போய்க்கொண்டிருக்கிறம். அடே St.John's இல ஷெல் விழுந்துட்டுதாம். பிறகு என்ன ஒரே ஒட்டம் எப்படி வீட்டை வந்து சேர்ந்தன் எண்டு இண்டு வரை எனக்கு தெரியாது.
அப்புறம் இடம் பெயர்வு அது இது எண்டு கொஞ்ச காலம் போச்சு। .பிறகு இது சரி வராது எண்டிட்டு மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு வந்து திருகோணமலைக்கு வந்தனாங்கள்। இப்ப அது எனக்கு ஒரு சொர்க்கபுரி மாதிரி(school தவிந்த மற்ற இடங்கள் ஏனெண்டா schoolஇல பல கசப்பான அனுபவங்கள்). சரி இனி திருகோணமலை school வாழ்க்கையை அடுத்த பதிவில எதிர்பாருங்கோ.....